Total Pageviews

6,336

Thursday, 29 August 2024

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா! கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

 


பாடகா் : சீா்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளா் : விஸ்வநாதன் ராமமூா்த்தி

ஆண் : { உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா } (2)

ஆண் : { தாய்க்கு நீ
மகனில்லை தம்பிக்கு
அண்ணனில்லை } (2)
ஊர் பழி ஏற்றாயடா
{ நானும் உன் பழி
கொண்டேனடா } (2)

ஆண் : உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா

ஆண் : மன்னவர் பணி
ஏற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி
பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா
கர்ணா மன்னித்து
அருள்வாயடா

ஆண் : செஞ்சோற்று
கடன் தீர்க்க சேராத
இடம் சேர்ந்து வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா வஞ்சகன் கண்ணனடா

ஆண் : உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா

No comments:

Post a Comment