Total Pageviews

6,339

Thursday, 29 August 2024

வாராய் என் தோழி ! வாராயோ ! மணப்பந்தல் காண வாராயோ !

 




பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு குயிலே

பெண் : சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு : சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : தனியாகக் காண வருவார்
இவள் தளிர்போல தாவி அணைவாள்
கண்போல சேர்ந்து மகிழ்வாள்
இரு கண் மூடி மார்பில் துயில்வாள்

பெண் : எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
குழு : எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்

பெண் : இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

No comments:

Post a Comment