Total Pageviews

Thursday 14 July 2016

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் ?

திரைப்படம்:  இரு வல்லவர்கள்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் + பி. சுசீலா

பாடல் : கவிஞர் கண்ணதாசன்

இசை: வேதா

ஆண்டு: 1966

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்

(நான் மலரோடு)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)


நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்

உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.

(நான் மலரோடு)


பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)



Monday 11 July 2016

படம் : எதிர் நீச்சல் : தாமரைக் கண்ணங்கள்..



படம் : எதிர் நீச்சல்

பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுஷீலா

பாடல் : வாலி

இசை : குமார்

வருடம்: 1968

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

தாமரைக் கண்ணங்கள்.. !

தேன்மலர்க் கிண்ணங்கள் !

எத்தனை வண்ணங்கள்..!

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள்!

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன்!

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் !.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட பூங்கொடியின்

சுவை கொண்ட தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)

தேன்மலர்க் கிண்ணங்கள்!

எத்தனை வண்ணங்கள்.. !

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள் !

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன் !

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய  செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு
கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட
பூங்கொடியின்

சுவை கொண்ட
தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)

எங்கே தேடுவேன் ? பணத்தை எங்கே தேடுவேன் ?




படம் : பணம்

இயற்றியவர் :  உடுமலை நாராயண கவி

இசை : M.S.விஸ்வநாதன்+இராமமூர்த்தி

பாடியவர் : N.S.கிருஷ்ணன்

வருடம் : 1953

🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்

அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை

(எங்கே தேடுவேன்)

கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ

கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ

கிண்டி ரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ

அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை

( எங்கே தேடுவேன்)

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......

பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ

சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண் புகுந்தாயோ

ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ

(எங்கே தேடுவேன்)

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்து விட்டாயோ

திருவ‌ண்ணாம‌லை குகை புகுந்தாயோ

இருப்புப் பெட்டிக‌ளில் இருக்கிறாயோ

இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இருக்காத ப‌ண‌ந்தன்னை

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ

தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌துங்கி விட்டாயோ

சூட‌ம் சாம்பிரானியாய் புகைந்து போனாயோ

எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே பணமே. . .