Total Pageviews

Friday 28 July 2023

பன்னீர் புஷ்பங்களே !

பன்னீர் புஷ்பங்களே பாடல் வரிகள்

Movie Name : Aval Appadithan (1978) (அவள் அப்படித்தான்)
Music :Ilaiyaraaja    Year :1978
Singers : Kamal Haasan       Lyrics :Gangai Amaran
 

பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு 
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது 
புது தாளம் தொட்டு ஓ 
புது ராகமிட்டு 

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ 
இது யார் பாவம் 

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ 
இது யார் சாபம் 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது .
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை 
நிஜ வாழ்க்கையிலே 

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது 
பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு

 

Thursday 24 November 2022

மயக்கமா ! கலக்கமா ! மனதிலே குழப்பமா ! வாழ்க்கையில் நடுக்கமா !




மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்
தோறும் வேதனை இருக்கும் (2)

வந்த துன்பம்
எதுவென்றாலும்
வாடி நின்றால்
ஓடுவதில்லை (2)

எதையும்
தாங்கும் இதயம்
இருந்தால் இறுதி
வரைக்கும் அமைதி
இருக்கும்

மயக்கமா கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி (2)

நாளை பொழுதை
இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு (2)

உனக்கும் கீழே
உள்ளவர் கோடி நினைத்து
பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

 Song : Mayakkama Kalakkama

  • Movie/Album Name : Sumai Thangi 1962
  • Star Cast : Gemini Ganesan and Devika
  • Singer : P.B. Sreenivas
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

போனால் போகட்டும் போடா !


 

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது
இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

சட்டி சுட்டதடா! கை விட்டதடா! புத்தி கெட்டதடா ! நெஞ்சைத் தொட்டதடா !



 சட்டி சுட்டதடா
கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

நாலும் நடந்து
முடிந்த பின்னால்
நல்லது கெட்டது
தெரிந்ததடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

பாதி மனதில்
தெய்வம் இருந்து பார்த்து
கொண்டதடா மீதி மனதில்
மிருகம் இருந்து ஆட்டி
வைத்ததடா (2)

ஆட்டி வைத்த
மிருகமின்று அடங்கி
விட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு
மனதில் கோயில்
கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை
நெஞ்சில் கூடிவிட்டதடா

தர்ம தேவன்
கோவிலிலே ஒலி
துலங்குதடா (2)

மனம் சாந்தி
சாந்தி சாந்தியென்று
ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

எறும்புத் தோலை
உரித்துப் பார்க்க யானை
வந்ததடா நான் இதயத்
தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா (2)

பிறக்கும் முன்னே
இருந்த உள்ளம் இன்று
வந்ததடா (2)
இறந்த பின்னே வரும்
அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

 

  • Song : Satti Suttathada
  • Movie/Album Name : Aalayamani 1962
  • Star Cast : Sivaji Ganesan, S. S. Rajendran, C. R. Vijayakumari and B. Saroja Devi
  • Singer : T.M. Soundararajan
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

 

பொன்னை விரும்பும் பூமியிலே !

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவன் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

பறந்து செல்லும்
பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை
அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே!

 
Song : Ponnai Virumbum

  • Movie/Album Name : Aalayamani 1962
  • Star Cast : Sivaji Ganesan, S. S. Rajendran, C. R. Vijayakumari and B. Saroja Devi
  • Singer : T. M. Soundararajan
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

Tuesday 27 September 2022

குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?,


 

 

குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?, இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, இருக்கும்.., அறிவை..?, மடமை.., மூடியே..?, இருட்டு.., உலகமடா..?, வாழ்வில்..?, எந்த.., நேரமும்..?, சண்டை.., ஓயாத..?, முறட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு..?, உலக..மடா..?, ஆஆஆ.., இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, விளையும்..?, பயிரை..?, வளரும்..?, கொடியை..?, வேருடன்.., அறுத்து..?, விளையாடும்..?, ம்ம்ம்.., ஹோ..ஹோ.., ஹோஹோஹோ.., ஹோ.., விளையும்..?, பயிரை..?, வளரும்..?, கொடியை..?, வேருடன்.., அறுத்து..?, விளையாடும்..?, மனம்.., வெந்திடும்..?, தோட்டக்..காரனிடம்..?, இரட்டல்.., வார்த்தைகள்..?, ஆ..டும்..?, பல.., வறட்டு..?, கீதமும்..?, பாடும்..?, வித.., வித..மான..?, பொய்களை..?, வைத்து..?, உறட்டும்..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, அன்பு.., படர்ந்த..?, கொம்பினிலே..?, ஒரு.., அகந்தைக்.., குரங்கு..?, தாவும்..?, அதன்.., அழகைக்..?, குலைக்க..?, மேவும்..?, கொம்பு.., ஒடிந்து..?, கொடியும்..?, குலைந்து..?, குரங்கும்.., விழுந்து..?, சாகும்..?, கொம்பு.., ஒடிந்து..?, கொடியும்..?, குலைந்து..?, குரங்கும்.., விழுந்து..?, சாகும்..?, சிலர்..?, குணமும்..?, இதுபோல்..?, குறுகிப்..?, போகும்..?, கிறுக்கு..?, உலகமடா..?, ஆஆ.., தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்..?, திருந்த..?, மருந்து.., சொல்லடா..?, குறுட்டு வழியில்..?, வாழ்வு.., தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?, ஆஆஆ.., இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, ஆஆஆ.., ஆஆஆ.., ஆ.., ஆ.., ஆ.., – KURUKKU VAZHIYIL VAZHVU THEDIDUM – MOVIE:- MAHADEVI (மகாதேவி)

காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா !

 

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

திரைப்படம்: சக்கரம்

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்



கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா