Total Pageviews

Friday 15 April 2016

ஒருவன் மனது ஒன்பதடா !





ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்


உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்


இறங்கும்போது சிரிக்கின்றான்


வாழும் நேரத்தில் வருகின்றான்


வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)




ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


தாயின் பெருமை மறக்கின்றான்


தன்னலச் சேற்றில் விழுகின்றான்


பேய் போல் பணத்தைக் காக்கின்றான்


பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)





ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


பட்டம் பதவி பெற்றவர் மட்டும்

பண்புடையோராய் ஆவாரா?


பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்


பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)


 

ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா .....

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி !





இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் 


தான் உரைப்பான்
 

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
 

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் 

தான் உரைப்பான்
 

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
 

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் 

தங்கமே
 

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு 


வைத்து
 

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு 

வைத்து
 

நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
 

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
 

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு 


ஆளாவான்
 

கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
 

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு 

ஆளாவான்
 

கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
 

அவன் கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே .... 

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை 


ஆட்டிவிட்டு...
 

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை 

ஆட்டிவிட்டு

தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே


அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் 


தங்கமே

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி


எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே


அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே 

வெளிவரும் தயங்காதே..

 
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே
 

ஒரு
 
தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு


நடுவினிலே நி விளையாடு
நல்லதை நினைத்தே நீ
  போராடு


நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே



ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதி
ல் பாதி

கழகத்தில் பிறப்பதுதான் நீதி


மனம் கலங்கா
தே மதிமயங்காதே

கலங்கா
தே, மதிமயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு


 மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே...
 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ?





எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதன் யாருமில்லையோ


அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


(எங்கே)



எனது கைகள் மீட்டும்போது


வீணை அழுகின்றது


எனது கைகள் தழுவும்போது


மலரும் சுடுகின்றது


என்ன நினைத்து என்னைப் படைத்தான்


இறைவன் என்பவனே


கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த


இறைவன் கொடியவனே.


(எங்கே)
 
பழைய பறவைபோல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை


மறந்து போனதே


என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்


வணங்குவேன் தாயே


இன்று மட்டும் அமைதி தந்தால்


உறங்குவேன் தாயே!


(எங்கே)

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு !



ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...


ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....


நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..


அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..


இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு....

வீடுவரை உறவு !

 
 ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

 
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது !




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா !

 
 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!



 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா !
ஆறடி நிலமே சொந்தமடா !
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா !
கண் மூடினால் காலில்லா கட்டிலடா!
பிறந்தோம் என்பதே முகவுரையாம்!
பேசினோம் என்பதே தாய்மொழியாம்!
மறந்தோம் என்பதே நித்திரையாம்!
மரணம் என்பதே முடிவுரையாம் !
ஆடி அடங்கும் வாழ்க்கையடா !

 ஆறடி நிலமே சொந்தமடா !
ஆடி அடங்கும் வாழ்க்கையடா !

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான் !
தீமைகள் செய்பவன் அழுகின்றான் !
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா


சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்

தீமைகள் செய்பவன் அழுகின்றான்

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை

இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

ஆறடி நிலமே சொந்தமடா !

ஆடி அடங்கும் வாழ்க்கையடா !
 
 

Thursday 14 April 2016

ஆசையே அலைபோலே !






ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது !







ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது!

ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது !


ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது !


ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது


வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் 


சிரிப்பேன் !

அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் !

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு !


அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு !


குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு


அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு !


பொறந்ததுக்குப் பரிசு இந்த ...


பொறந்ததுக்குப் பரிசு 


இந்த சிரிப்பு அல்லவா

இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா

பதமா இதமா சிரிச்சா சுகமா

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது


வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன் !


அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் !

குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது!


அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது


குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது


அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது


குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது


அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது

பதமா இதமா சிரிச்சா சுகமா

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது !


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது!


வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன் !


அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்!


ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது!


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது!