Total Pageviews

Friday 20 September 2019

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !




இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!

அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு !

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை !

இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை!

இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை!

இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை!

கனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்!

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்!

இணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்!

அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்!

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!

வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்!

உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்!

எண்ணம் - மருதகாசி

குரல் - சீர்காழி கோவிந்தராஜன்

இசை - கே வி மகாதேவன்

திரைச்சித்திரம் - மானமுள்ள மறுதாரம்