Total Pageviews

Monday 11 July 2016

எங்கே தேடுவேன் ? பணத்தை எங்கே தேடுவேன் ?




படம் : பணம்

இயற்றியவர் :  உடுமலை நாராயண கவி

இசை : M.S.விஸ்வநாதன்+இராமமூர்த்தி

பாடியவர் : N.S.கிருஷ்ணன்

வருடம் : 1953

🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்

அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை

(எங்கே தேடுவேன்)

கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ

கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ

கிண்டி ரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ

அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை

( எங்கே தேடுவேன்)

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......

பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ

சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண் புகுந்தாயோ

ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ

(எங்கே தேடுவேன்)

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்து விட்டாயோ

திருவ‌ண்ணாம‌லை குகை புகுந்தாயோ

இருப்புப் பெட்டிக‌ளில் இருக்கிறாயோ

இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இருக்காத ப‌ண‌ந்தன்னை

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ

தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌துங்கி விட்டாயோ

சூட‌ம் சாம்பிரானியாய் புகைந்து போனாயோ

எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே பணமே. . .
 

 

No comments:

Post a Comment