Total Pageviews

Thursday, 29 August 2024

காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்! காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்!

 

 


 

பாடகர் : டி . எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ……………………….

ஆண் : வணக்கம் .. வந்தனம் ..
நமஸ்த்தே… நமோஸ்கார் …

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் பூவில் உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்க்கம் இதுவென்று

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : ரண்டி பண்ணி யயாதி ஆஷோ
Its a paradise on earth.. so i visited God!
Come on enjoy summer season
Charming flowers… hanging gardens

ஆண் : எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்

பெண் : ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?

ஆண் : சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

குழு : .…………………………..

ஆண் : ஆடைகள் கூடைகள் கம்பளம்
ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும்
ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால்
நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும்
பொற்காலம் உண்டாகும்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

குழு : ……………………………….

ஆண் : வெட வெட வென்று குளிரும்போது
கதகதப்பாக இருப்பதற்கு
இங்கே வாழும் மனிதர் யாவரும்
வயிற்றில் கட்டிவைத்திருப்பார் ஒரு கணப்பு

ஆண் : வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார்
என்னும் பழமொழி இவர் தான் படைத்தாரோ

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது

ஆண் : யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்

காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் பூவில் உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்க்கம் இதுவென்று

ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்



No comments:

Post a Comment