Total Pageviews

Tuesday 27 September 2022

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!

திரைப்படம்: சித்தி இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் 

 இசை: எம்.எஸ். விஸ்வநாதன் 

 பாடியவர்: பி. சுசீலா 

 -------------------------------------------------  


காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ!

No comments:

Post a Comment