Total Pageviews

Wednesday 3 March 2021

நண்டூருது நரியூருது நண்டூருது நரியூருது நண்டூருது...

 


 

ண்டூருது நரியூருது நண்டூருது நரியூருது நண்டூருது...
நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது 
நண்டூருது நரியூருது நண்டூருது...


ஆடுது தொட்டிலோன்று பிள்ளையில்லை அங்கே 
ஆகாயம் காத்திருக்க வெண்ணிலவு எங்கே
பாடிடும் பூங்குயிலின் ஜாதி எங்கே சென்றால் 
பல்லாக்கில் இரண்டு வகை ஒன்றில் ஏறிக்கொண்டால் 


வாழ்த்துங்கள் என்று வானகம் போனால் 
வானக தேவரெல்லாம் வரவேற்கவே 
நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது 
என் கண்ணில் ஆடுது


நாளுக்கு நாள் உழைத்தேன் நன்றி இல்லை அங்கே 
நல்லவர் வாழ்வதற்கு ஞாயம் இல்லை இங்கே 
ஏழைக்கு உலகம் என்று எழுதியவன் எங்கே ?
எடுப்பதை எடுத்த பின்தான் நீதி வரும் இங்கே 


தாய் மேல் ஆணை. தங்கை மேல் ஆணை
தர்மம் ஜெயிக்கும் என்று நான் காட்டுவேன்
நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது 
என் கண்ணில் ஆடுது
நண்டூருது நரியூருது நண்டூருது...

No comments:

Post a Comment