Total Pageviews

Friday 28 July 2023

பன்னீர் புஷ்பங்களே !

பன்னீர் புஷ்பங்களே பாடல் வரிகள்

Movie Name : Aval Appadithan (1978) (அவள் அப்படித்தான்)
Music :Ilaiyaraaja    Year :1978
Singers : Kamal Haasan       Lyrics :Gangai Amaran
 

பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு 
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது 
புது தாளம் தொட்டு ஓ 
புது ராகமிட்டு 

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ 
இது யார் பாவம் 

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ 
இது யார் சாபம் 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது .
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை 
நிஜ வாழ்க்கையிலே 

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது 
பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு

 

1 comment:

  1. அருமையான பாடல் இது கமல்ஹாசன் பாடியது என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்.

    இதை ஜெயச்சந்திரன் பாடியதாக நினைத்து இருந்தேன்.

    ReplyDelete