Total Pageviews

6,357

Saturday, 31 May 2025

குபு குபு குபு குபு நான் என்ஜின் !

 


 

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

ஆண் : என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
ஓஹா என்னை விட்டு போகாதே

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

பெண் : அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அவர் அப்பொழுதே கொடுப்பாரு

ஆண் : ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால்
அம்மா அப்பா யாரும்
இது ஆண்டு அறுபத்தி ஆறு
என்ஜின் வண்டி ரெண்டும் போலே
என்றும் ஒன்றாய் இருப்போம்

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

பெண் : காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி
கண்டபடி நீ பேசாதே
உன் காதலை அள்ளி வீசாதே
ஆண் : ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
ப்ரீடம் இருக்குது லவ் பண்ண
ஆனால் லவ்ல சக்சஸ்சு
ஆகாட்டி போனா டைவர்ஸ்

பெண் : இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் : ஆ…..
பெண் : உ ஹ்ம்ம்
எனக்கு திருமணம் ஆச்சு

ஆண் : இத்தனை நேரம் இதனை சொல்ல
ஏன் தெரியாமல் போச்சு
ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு

பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் : குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் : டகு டகு டகு டகு டகு நான் வண்டி
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே

 

காத்திருந்த கண்களே ! கதையளந்த நெஞ்சமே ! ஆசை என்னும் வெள்ளமே ! பொங்கி பெருகும் உள்ளமே !


 

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

ஆண் : கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

பெண் : {மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன} (2)

ஆண் : பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

ஆண் : கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
இந்த வையகம் இருண்டதென்ன

பெண் : செவ்விதழோரம் தேனெடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து
இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன

பெண் : காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

இருவர் : லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லால்லா…….

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்...

 



 

 சின்னச் சின்ன கண்ணனுக்கு

என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்

MUSIC


பஞ்சவர்ண
கிளி என்ன
நானில்லையா


பசும்பால் திரட்டி
பூசி வைத்த
முகம் இல்லையா...


பஞ்சவர்ண
கிளி என்ன
நானில்லையா


பசும்பால் திரட்டி
பூசி வைத்த
முகம் இல்லையா


நெஞ்சுருக
பாடி வரும்
குரல் இல்லையா...


நெஞ்சுருக
பாடி வரும்
குரல் இல்லையா...


நறு நெய் வாசம்
தாங்கி வரும்
குழல் இல்லையா


நறு நெய் வாசம்
தாங்கி வரும்
குழல் இல்லையா


இல்லையா
இல்லையா
இல்லையா...


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்

MUSIC


பச்சரிசி போல்
சிரிக்கும்
சிரிப்பில்லையா


பனை வெல்லம்
போல் இனிக்கும்
மொழி இல்லையா


பச்சரிசி போல்
சிரிக்கும்
சிரிப்பில்லையா


பனை வெல்லம்
போல் இனிக்கும்
மொழி இல்லையா


பந்தாட்டம்
போலாடும்
உடலில்லையா


பந்தாட்டம்
போலாடும்
உடலில்லையா


பள்ளியறைக்கேற்ற நல்ல
குணம் இல்லையா


பள்ளியறைக்கேற்ற நல்ல
குணம் இல்லையா


இல்லையா
இல்லையா
இல்லையா...


ம்...

சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


வண்ண வண்ண
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


வட்டமிட்டு
பாடிடும்
கன்னி வேண்டும்


சின்னச் சின்ன
கண்ணனுக்கு
என்ன வேண்டும்...


சிங்கார மொழி
சொல்லும்
பொண்ணு வேண்டும்


 

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ !



 

Movie Name : Vaazhkai Padagu
Music : M.S.Viswanathan,Ramamurthi
• Singer(s) : P B Srinivas

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
நேற்று வரை நீ யாரோ நா யாரோ ..
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே …
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ …
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

@ song uploaded by isaacdurai@

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே ….
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன
தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தாலென்ன
பூ முகம் சிவந்தா போகும்
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

பாவை உன் முகத்தைக் கன்டேன்
தாமரை மலரைக் கன்டேன் …
பாவை உன் முகத்தைக் கன்டேன்
தாமரை மலரைக் கன்டேன்
கோவை போல் இதழைக் கன்டேன்
குங்குமச் சிமிழை கன்டேன்
வந்ததாய் கனவோ என்று
வாடினேன் தனியாய் இன்று
வந்து போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ ….
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ ...