கொரோனா விழிப்புணர்வு தமிழ் பாடல்!  வைரலாகி வருகிறது. இந்த பாடலில் 
கொரோனா எப்படி பரவுகிறது, அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், என்ன 
அறிகுறிகளை கொடுக்கும், உள்ளிட்ட தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த பாடல் ரஜினி
 நடித்த முத்து படத்தில் தில்லானா தில்லானா மெட்டில் உருவாகியுள்ளது.
அந்த பாடல் பின் வருமாறு: 
கொரோனா ! கொரோனா! என்னை கொன்னுடாதா வீணா !
நெஞ்சுக்குள்ள நீயும் வரவேணாம்!
கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா வீணா
!
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
 கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா !
[Soon Ah] 
வீட்டுக்குள்ள சேஃபா [safe aha] இருப்பேன் நான்
!
இரும வச்சதும் நீ தானா , அட காய்ச்சல் தந்ததும் நீ தானா!
 மாஸ் கேதரிங் வேணாமுன்னு நியூஸில் சொன்னானா !
 கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா 
வீணா
!நெஞ்சுக்குள்ள நீயும் வரவேணாம்! 
 கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா 
 வீட்டுக்குள்ள சேஃபா இருப்பேன் நான் 
சைனாவினில் பிறந்த நீயும் சளிக்காத நோயை 
கண்ணு மூக்கு வாயை தொட்டு பரப்பாதே நீயே 
காய்ச்சல் வரட்டு இருமல் சோர்வு மூச்சுத் திணறல் 
தலைவலி
இவைதானே கொரோனாவின் குறிப்பான 
அறிகுறி
ஊரோடு சேராமல் இருக்கின்றேன் 
உன்னாலே
சானிடைசர் பூசாமல் தொடவில்லை 
உன்னாலே
டிரெயின் பஸ் ஏரோபிளேனில் 
ஏறவில்லை உன்னாலே
மால் தியேட்டக் பார்க் 
என்று சுற்றவில்லை உன்னாலே
ஸ்கூலுக்கு 
போவாத சுட்டீஸ் தொல்லை உன்னாலே 
கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா 
வீணா
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா 
வீட்டுக்குள்ள சேஃபா இருப்பேன் நான்
இரும 
வச்சதும் நீ தானா , அட காய்ச்சல் தந்ததும் நீ தானா 
கூட்டம் கூட்டமாக சேராதேனு WHO 
சொன்னான்னா 
ஹச் ஹச் தும்மல்.....
ஹச் ஹச் தும்மல் 
கழுவிட்டோம் விட்டோம் டோம் டோம் (4) 
கொரோனா வைரஸ் உலகில் பலகோடி உண்டு 
கொத்து கொத்தாய் கொரோனா நம் மீது கண் 
வைத்ததென்ன
பன்றிக் காய்ச்சல் பறவை காய்ச்சல் 
இதில் மீளும் போது
கொரோனாவில் வென்று 
மீண்டும் எழுவோமே நாமே
தடுப்பூசி வரும் 
வரையில் தடுத்தாள வேண்டாமா
கிருமி தூசி 
பரவாமல் முகமூடி அணிவோமா
வெளியில் சுற்றி 
வந்தாலே கழுவி விடு கை காலை
குழந்தைகள், 
பெரியோரை காத்து விடு கண் போலே
இனி ஒரு 
விதி செய்து இந்த நாளும் காப்போமே
கொரோனா 
கொரோனா என்னை கொன்னுடாதா வீணா 
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம்
கொரோனா 
கொரோனா என்னை கொன்னுடாதா வீணா 
நெஞ்சுக்குள்ள நீயும் வர வேணாம்
கூட்டத்துல 
போன நீ தொத்திக்குவ சூனா
வீட்டுக்குள்ள சேஃபா 
இருப்பேன் நான்
இரும வச்சதும் நீ தானா , அட 
காய்ச்சல் தந்ததும் நீ தானா
கூட்டம் போட 
வேணாமுன்னு தனியா இருக்க சொன்னானா 
கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா 
வீணா
நெஞ்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா 
வீட்டுக்குள்ள சேஃபா இருப்பேன் நான்
மூச்சுக்குள் 
நீயும் வரவேணாம்
வீட்டுக்குள்ள நீயும் வரவேணாம்
ஐயோ இன்னும் எத்தநாலு இந்த நோயோ (2)
என்று பாடல் முடிகிறது. 
இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
