Total Pageviews
Wednesday, 18 September 2024
காசிக்கு போகும் சந்யாசி ! உன் குடும்பம் என்னாகும் நீ யோசி !
Thursday, 29 August 2024
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்!
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்
ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்
ஆண் : சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல
சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம்………
ஒஹோஹ் ஹோ ஹோய்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்
ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்
ஆண் : செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா
ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா
ஆண் : மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா
பாரடியம்மா………..
ஓஹோஹோ……..ஹோ…….ஹோய் ….ஓஹோ….
ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன! இதழ் விரித்தால் என்ன!
பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
மலர்கள் சிரிக்கும் கொடியில்
அலைகள் சிரிக்கும் கடலில்
மலர்கள் சிரிக்கும் கொடியில்
அலைகள் சிரிக்கும் கடலில்
நிலவும் சிரிக்கும் இரவில்
நீயும் சிரித்தாள் என்ன
பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆண் : மெல்ல சிரித்தால் என்ன
பெண் : இதழ் விரித்தால் என்ன
ஆண் : உதட்டு சிவப்பெடுத்து
பதிக்க முகம் கொடுத்து
உதவும் சமயமல்லவோ
பெண் : கரும்பின் சுவை வடித்து
திரும்ப அதை கொடுக்க
விரும்பும் இதயமல்லவோ
ஆண் : கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்
கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்
ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம்
ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம்
பெண் : குளிர் நீரோட்டம் பாய்ந்திருக்க
பூவாட்டம் நான் மிதக்க
ஆண் : கண்ணோட்டம் வந்ததென
என்னை அழைக்க …என்னை அழைக்க
ஆனந்தம்
பெண் : இன்று ஆரம்பம்
ஆண் : மெல்ல சிரித்தால் என்ன
பெண் : இதழ் விரித்தால் என்ன
ஆண் : தாலாட்ட காத்திருக்க
தென்பாங்கு பாட்டிருக்க
தேவிக்கு தேவை என்னவோ
பெண் : கண்நூஞ்சல் ஆடிவரும்
மன்னாதி மன்னன் முகம்
கண்டாலும் போதை அல்லவோ
ஆண் : முத்துக்களால் கட்டி வைத்த மாலை ஒன்று
தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ
பெண் : செவ்வான கோலம் கொண்ட மேனி ஒன்று
சந்திக்க சொல்லி என்னை தூண்டுமோ
ஆண் : …………….
பெண் : …………………..
ஆண் : ஆனந்தம் பெண் : இன்று ஆரம்பம்
ஆண் : மெல்ல சிரித்தால் என்ன
பெண் : இதழ் விரித்தால் என்ன
ஆண் : மலர்கள் சிரிக்கும் கொடியில்
பெண் : அலைகள் சிரிக்கும் கடலில்
ஆண் : நிலவும் சிரிக்கும் இரவில்
பெண் : நீயும் சிரித்தாள் என்ன –
இருவர் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்! காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்!
பாடகர் : டி . எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : ……………………….
ஆண் : வணக்கம் .. வந்தனம் ..
நமஸ்த்தே… நமோஸ்கார் …
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் பூவில் உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்க்கம் இதுவென்று
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஆண் : ரண்டி பண்ணி யயாதி ஆஷோ
Its a paradise on earth.. so i visited God!
Come on enjoy summer season
Charming flowers… hanging gardens
ஆண் : எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
பெண் : ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?
ஆண் : சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
குழு : .…………………………..
ஆண் : ஆடைகள் கூடைகள் கம்பளம்
ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும்
ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால்
நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும்
பொற்காலம் உண்டாகும்
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
குழு : ……………………………….
ஆண் : வெட வெட வென்று குளிரும்போது
கதகதப்பாக இருப்பதற்கு
இங்கே வாழும் மனிதர் யாவரும்
வயிற்றில் கட்டிவைத்திருப்பார் ஒரு கணப்பு
ஆண் : வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார்
என்னும் பழமொழி இவர் தான் படைத்தாரோ
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஆண் : என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
ஆண் : யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் பூவில் உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்க்கம் இதுவென்று
ஆண் : காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்
காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர்
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி ! திருமணம் கொண்டாள் இனிதாக !
பாடகர் : டி . எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழை கன்று போல
தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே
ஆண் :
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக
ஆண் : மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆண் : ஆயிரம் காலம் நாயகன் கூட
வாழ்ந்திடு மகளே நலமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக
ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக
ஆண் : எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் குலம் வளர் கண்மணியாம் ,
இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்
ஆண் : தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்
ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக
ஆண் : ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
ஆண் : குரல் வழி காணும்
ஆறாம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள்
யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே ! தங்கச்சி கண்ணே ! சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே!
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
ஆண் :
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
ஆண் : அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும்
அம்மா அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
ஆண் : மாமியாரை மாமனாரை மதிக்கணும்
உன்னை மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சு சாணம் தெளிச்சு கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்
ஆண் : புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
ஆண் : கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
ஆண் : புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
ஆண் : புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுங்க ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆண் : புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
ஆண் : தாலி கட்ட போகையிலே
தாய் தகப்பன் இல்லையின்னு
சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி
தாலி கட்ட போகையிலே
தாய் தகப்பன் இல்லையின்னு
சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி
ஆண் : தார வார்க்க நான் இருக்கேன்
சீர் கொடுக்க நான் இருக்கேன்
தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி
தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி
ஆண் : புருஷன் கூட நீ இருந்து
பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சுகிட்டு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மக்களைப் பெத்து மனையப் பெத்து
மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி
நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி
வாராய் என் தோழி ! வாராயோ ! மணப்பந்தல் காண வாராயோ !
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெண் : மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ
குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெண் : மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு குயிலே
பெண் : சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு : சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெண் : தனியாகக் காண வருவார்
இவள் தளிர்போல தாவி அணைவாள்
கண்போல சேர்ந்து மகிழ்வாள்
இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
பெண் : எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
குழு : எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெண் : மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
பெண் : இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெண் : மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ
குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ