Total Pageviews

Thursday, 29 August 2024

திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி ! திருமணம் கொண்டாள் இனிதாக !

 

பாடகர் : டி . எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழை கன்று போல
தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே

ஆண் :
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக

ஆண் : மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க

ஆண் : ஆயிரம் காலம் நாயகன் கூட
வாழ்ந்திடு மகளே நலமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக

ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக

ஆண் : எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் குலம் வளர் கண்மணியாம் ,
இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்

ஆண் : தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்

ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக

ஆண் : ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு

ஆண் : குரல் வழி காணும்
ஆறாம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள்
யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக

ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

ஆண் : திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக

புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே ! தங்கச்சி கண்ணே ! சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே!

 

பாடகர் : திருச்சி லோகநாதன்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

ஆண் :
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே

ஆண் : அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும்
அம்மா அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே

ஆண் : மாமியாரை மாமனாரை மதிக்கணும்
உன்னை மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சு சாணம் தெளிச்சு கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்

ஆண் : புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே

ஆண் : கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

ஆண் : புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே

ஆண் : புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுங்க ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

ஆண் : புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே சில புத்திமதிக
சொல்லுறன் கேளு முன்னே

ஆண் : தாலி கட்ட போகையிலே
தாய் தகப்பன் இல்லையின்னு
சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி
தாலி கட்ட போகையிலே
தாய் தகப்பன் இல்லையின்னு
சஞ்சலபடாதே அம்மா தங்கச்சி

ஆண் : தார வார்க்க நான் இருக்கேன்
சீர் கொடுக்க நான் இருக்கேன்
தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி
தாயை போல நான் இருக்கேன் தங்கச்சி

ஆண் : புருஷன் கூட நீ இருந்து
பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சுகிட்டு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மக்களைப் பெத்து மனையப் பெத்து
மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி
நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி

வாராய் என் தோழி ! வாராயோ ! மணப்பந்தல் காண வாராயோ !

 




பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு குயிலே

பெண் : சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு : சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : தனியாகக் காண வருவார்
இவள் தளிர்போல தாவி அணைவாள்
கண்போல சேர்ந்து மகிழ்வாள்
இரு கண் மூடி மார்பில் துயில்வாள்

பெண் : எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
குழு : எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்

பெண் : இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பெண் : மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ

குழு : வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா! கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

 


பாடகா் : சீா்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளா் : விஸ்வநாதன் ராமமூா்த்தி

ஆண் : { உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா } (2)

ஆண் : { தாய்க்கு நீ
மகனில்லை தம்பிக்கு
அண்ணனில்லை } (2)
ஊர் பழி ஏற்றாயடா
{ நானும் உன் பழி
கொண்டேனடா } (2)

ஆண் : உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா

ஆண் : மன்னவர் பணி
ஏற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி
பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா
கர்ணா மன்னித்து
அருள்வாயடா

ஆண் : செஞ்சோற்று
கடன் தீர்க்க சேராத
இடம் சேர்ந்து வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா வஞ்சகன் கண்ணனடா

ஆண் : உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை
எதிர்கொள்ளடா

இறைவன் இருக்கின்றானா... மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் எங்கே வாழ்கிறான்

 


படம் : அவன் பித்தனா
பாடல் - இறைவன் இருக்கின்றானா
நடிகர் : எஸ். எஸ். ராஜேந்திரன்
நடிகை - விஜயக்குமாரி
பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன்
பாடகி - P.சுசீலா
பாடலாசிரியர் ; கண்ணதாசன்
இசை : ஆர். பார்த்தசாரதி
இயக்குனர் - ப.நீலகண்டன்
வெளியான ஆண்டு - 1966
தமிழில் உங்களுக்கு அளிப்பது ஐசக்
பதிவேர்த்த நாள் 2/12/2019

ஆண்>இறைவன் இருக்கின்றானா... ஆ...
இறைவன் இருக்கின்றானா...
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்

நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை

Please Search # Tamil Golden Hits
பெண்<மனிதன் இருக்கிறானா... ஆ...
மனிதன் இருக்கிறானா...
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்

நான் அன்பு காட்டினே
அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை

Please Search # Tamil Golden Hits

பெண்<கண்ணிலே உறுதி இல்லை
காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம்
மறு நாள் இருக்கவில்லை

குடிசையில் ஓர் மனது
கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம்
கூடினால் பல மனது
மனிதன் இருக்கிறானா... ஆ...
Please Search # Tamil Golden Hits
ஆண்>பார்ப்பவன் குருடனடி
படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை
என்று கண்ணாடி காட்டுதடி

இறைவன் இருக்கின்றானா... ஆ...
கேட்பதற்கு இனிமையான

பாடல்களை தங்களின்
இனிமையான குரலில்
நீங்கள் பாடி மகிழ
Please Search # Tamil Golden Hits
என்று நீங்கள் தேடினால்
என்னுடைய
அணைத்து பாடல்களும்
தங்களுக்கு கிடைக்கும்

பெண்<ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை
கண்ணாக யார் நினைத்தார்

இருந்தால் இருந்த இடம்
இல்லையேல் மறந்து விடும்
இவர் தான் மனிதரென்றால்
இயற்கையும் நின்று விடும்

மனிதன் இருக்கிறானா... ஆ...
கேட்பதற்கு இனிமையான

பாடல்களை தங்களின்
இனிமையான குரலில்
நீங்கள் பாடி மகிழ
Please Search # Tamil Golden Hits
என்று நீங்கள் தேடினால்
என்னுடைய
அணைத்து பாடல்களும்
தங்களுக்கு கிடைக்கும்
ஆண்>சந்தேகம் பிறந்து விட்டால்
சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவரும்
சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை
மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு
வாழ்பவன் இறைவன் இல்லை
இறைவன் இருக்கின்றானா...
பெண்>மனிதன் இருக்கிறானா...
ஆண்>இறைவன் இருக்கின்றானா...
மனிதன் கேட்கிறான்
பெண்<அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்

எங்கே... வாழ்கிறான்...

மனிதன் நினைப்பதுண்டு… வாழ்வு நிலைக்குமென்று… இறைவன் நினைப்பதுண்டு… பாவம் மனிதனென்று…

 


                                   பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு…
வாழ்வு நிலைக்குமென்று…
இறைவன் நினைப்பதுண்டு…
பாவம் மனிதனென்று…

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது
மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன
அவன் ஆட்சி நடக்கின்றது

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால்
அந்த குருவி பறந்து விடும்

காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா
சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை
என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

Saturday, 24 August 2024

பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ!

 1978ஆம் வருடம் வெளிவந்த “சீர்வரிசை” இந்த படத்தில் பாடல்கள் அனைத்துக் தேன் மழை தான் போங்கள். இந்த பாடலில் முக்கியத்துவமே ஹம்மிங் தான் சூப்பர். முத்துராமன், லதா நடித்திருக்கிறார்கள். உங்களூக்கு படக்காட்சி நினைவுக்கு வருதுங்களா? நீங்களூம் சுவரசியமான தகவல்களூம் தரலாமே??

படம்: சீர்வரிசை


நடிகர்: முத்துராமன், லட்சுமி,  ரோஜாமணி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: கே.சொர்ணம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
கம்பெனி: கே.சி.ப்லிம்ஸ்
வருடம் : 1978


பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆஆஆ

பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களா ஆஆஆஆஆ சொல்லம்மா

ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்

காட்டில பூவும் கூட்டில தேனும்
பொங்குற போது தேத்திக்கறேன்
ஆசை இருக்கு பேசி முடிக்க
ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது

பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏஏஏ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
சொல்லத்தான் தெரியாது

ஆஆஆஆ ஏஏஏஏ
ஆஆஆஆ ஓஓஓஒ

மங்கை மேனியில் பொங்கும் மங்களம்
கண்கள் உன்னட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும்

உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ

உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ

நேத்துக்கு மனது கேட்குது ஏதோ
சொல்லுங்க கொஞ்ம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி
ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்

ஆஆஆஆஆஆ ஹோஓஓஓஓஓ
ரர்ரரரரரரர்ராஆஆஆஆ ஹெஹேஏஏஏஏ
ஆஆஆஆஆஆ

தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க

தொட்டல் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க

சின்னம் சிருசு அனுபவம் இல்லை
ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹேஏஏஏஎ

மாங்கனி கண்ணம் பூங்கொடி மேனி
தீங்குவராமல் பார்த்துக்கனும்…