Total Pageviews

Wednesday, 31 August 2016

கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே !



படம் : இரும்புத்திரை

பாடல் : பட்டுக்கோட்டை

இசை : வெங்கட்ராமன்

பாடியவர் : திருச்சி லோகநாதன்

வருடம் : 1960

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

கையிலே வாங்கினேன் பையிலே 


போடலே!

காசுபோன இடம் தெரியலே _ என்



காதலிப் பாப்பா காரணம் கேப்பா

ஏது சொல்வதென்றும் புரியலே

ஏழைக்கும் காலம் சரியில்லே. . .


மாசம் முப்பது நாளும் ஒழைச்சு

வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு

காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்

கணக்கு நோட்டோட நிக்கிறான்

வந்து


எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்

(கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா

பட்டினியால் பாடுபட்டா

கட்டுக்கட்டா நோட்டுச் சேருது

கெட்டிக்காரன் பொட்டியிலே

அது


குட்டியும் போடுது வட்டியிலே

(கையிலே…)


விதவிதமாய்த் துணிகள் இருக்கு

விலையைக் கேட்டா நடுக்கம் வருது

வகைவகையா நகைகள் இருக்கு

மடியைப் பார்த்தா மயக்கம் வருது

எதைஎதையோ வாங்கணுமின்னு 


அண்ணே      

(எதை)

எண்ணமிருக்கு வழியில்லே

இதை


எண்ணாமிலிருக்கவும் முடியல்லே

(கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்

பொண்ணுக்குத் துணையா ஆணப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்

என்னைப் போலே பலரையும் படைச்சு

அண்ணே


என்னைப் போலே பலரையும் படைச்சு

இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்

ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?

(கையிலே…)

Thursday, 14 July 2016

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் ?

திரைப்படம்:  இரு வல்லவர்கள்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் + பி. சுசீலா

பாடல் : கவிஞர் கண்ணதாசன்

இசை: வேதா

ஆண்டு: 1966

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்

(நான் மலரோடு)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)


நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்

உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.

(நான் மலரோடு)


பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)



Monday, 11 July 2016

படம் : எதிர் நீச்சல் : தாமரைக் கண்ணங்கள்..



படம் : எதிர் நீச்சல்

பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுஷீலா

பாடல் : வாலி

இசை : குமார்

வருடம்: 1968

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

தாமரைக் கண்ணங்கள்.. !

தேன்மலர்க் கிண்ணங்கள் !

எத்தனை வண்ணங்கள்..!

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள்!

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன்!

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் !.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட பூங்கொடியின்

சுவை கொண்ட தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)

தேன்மலர்க் கிண்ணங்கள்!

எத்தனை வண்ணங்கள்.. !

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள் !

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன் !

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய  செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு
கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட
பூங்கொடியின்

சுவை கொண்ட
தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)

எங்கே தேடுவேன் ? பணத்தை எங்கே தேடுவேன் ?




படம் : பணம்

இயற்றியவர் :  உடுமலை நாராயண கவி

இசை : M.S.விஸ்வநாதன்+இராமமூர்த்தி

பாடியவர் : N.S.கிருஷ்ணன்

வருடம் : 1953

🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்

அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை

(எங்கே தேடுவேன்)

கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ

கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ

கிண்டி ரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ

அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை

( எங்கே தேடுவேன்)

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......

பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ

சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண் புகுந்தாயோ

ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ

(எங்கே தேடுவேன்)

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்து விட்டாயோ

திருவ‌ண்ணாம‌லை குகை புகுந்தாயோ

இருப்புப் பெட்டிக‌ளில் இருக்கிறாயோ

இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இருக்காத ப‌ண‌ந்தன்னை

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ

தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌துங்கி விட்டாயோ

சூட‌ம் சாம்பிரானியாய் புகைந்து போனாயோ

எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே பணமே. . .
 

 

Friday, 15 April 2016

ஒருவன் மனது ஒன்பதடா !





ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்


உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்


இறங்கும்போது சிரிக்கின்றான்


வாழும் நேரத்தில் வருகின்றான்


வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)




ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


தாயின் பெருமை மறக்கின்றான்


தன்னலச் சேற்றில் விழுகின்றான்


பேய் போல் பணத்தைக் காக்கின்றான்


பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)





ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


பட்டம் பதவி பெற்றவர் மட்டும்

பண்புடையோராய் ஆவாரா?


பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்


பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)


 

ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா .....

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி !





இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் 


தான் உரைப்பான்
 

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
 

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் 

தான் உரைப்பான்
 

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
 

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் 

தங்கமே
 

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு 


வைத்து
 

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு 

வைத்து
 

நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
 

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
 

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு 


ஆளாவான்
 

கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
 

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு 

ஆளாவான்
 

கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
 

அவன் கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே .... 

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை 


ஆட்டிவிட்டு...
 

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை 

ஆட்டிவிட்டு

தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே


அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் 


தங்கமே

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி


எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே


அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே 

வெளிவரும் தயங்காதே..

 
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே
 

ஒரு
 
தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு


நடுவினிலே நி விளையாடு
நல்லதை நினைத்தே நீ
  போராடு


நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே



ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதி
ல் பாதி

கழகத்தில் பிறப்பதுதான் நீதி


மனம் கலங்கா
தே மதிமயங்காதே

கலங்கா
தே, மதிமயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு


 மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே...