Total Pageviews

Thursday, 29 August 2024

மனிதன் நினைப்பதுண்டு… வாழ்வு நிலைக்குமென்று… இறைவன் நினைப்பதுண்டு… பாவம் மனிதனென்று…

 


                                   பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு…
வாழ்வு நிலைக்குமென்று…
இறைவன் நினைப்பதுண்டு…
பாவம் மனிதனென்று…

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது
மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன
அவன் ஆட்சி நடக்கின்றது

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால்
அந்த குருவி பறந்து விடும்

காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா
சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை
என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

Saturday, 24 August 2024

பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ!

 1978ஆம் வருடம் வெளிவந்த “சீர்வரிசை” இந்த படத்தில் பாடல்கள் அனைத்துக் தேன் மழை தான் போங்கள். இந்த பாடலில் முக்கியத்துவமே ஹம்மிங் தான் சூப்பர். முத்துராமன், லதா நடித்திருக்கிறார்கள். உங்களூக்கு படக்காட்சி நினைவுக்கு வருதுங்களா? நீங்களூம் சுவரசியமான தகவல்களூம் தரலாமே??

படம்: சீர்வரிசை


நடிகர்: முத்துராமன், லட்சுமி,  ரோஜாமணி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: கே.சொர்ணம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
கம்பெனி: கே.சி.ப்லிம்ஸ்
வருடம் : 1978


பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆஆஆ

பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களா ஆஆஆஆஆ சொல்லம்மா

ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்

காட்டில பூவும் கூட்டில தேனும்
பொங்குற போது தேத்திக்கறேன்
ஆசை இருக்கு பேசி முடிக்க
ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது

பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏஏஏ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
சொல்லத்தான் தெரியாது

ஆஆஆஆ ஏஏஏஏ
ஆஆஆஆ ஓஓஓஒ

மங்கை மேனியில் பொங்கும் மங்களம்
கண்கள் உன்னட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும்

உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ

உதட்டுக்குமேலே ஓரகை உண்டோ
உடம்பிலே போணல மாருதியேதோ ஹேஏஏ

நேத்துக்கு மனது கேட்குது ஏதோ
சொல்லுங்க கொஞ்ம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி
ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்

ஆஆஆஆஆஆ ஹோஓஓஓஓஓ
ரர்ரரரரரரர்ராஆஆஆஆ ஹெஹேஏஏஏஏ
ஆஆஆஆஆஆ

தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க

தொட்டல் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க

சின்னம் சிருசு அனுபவம் இல்லை
ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹேஏஏஏஎ

மாங்கனி கண்ணம் பூங்கொடி மேனி
தீங்குவராமல் பார்த்துக்கனும்…

காக்கை சிறகினிலே நந்தலாலா – நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா!

                              பாடகி : சுஜாதா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா – நிந்தன்
கரிய நிறம்
தோன்றுதடா நந்தலாலா

பெண் : பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா – நிந்தன்
பச்சை நிறம்
தோன்றுதடா நந்தலாலா

பெண் : கேட்கும் ஒளியில் எல்லாம்
நந்தலாலா -நிந்தன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

பெண் : தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா

பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா – நிந்தன்
கரிய நிறம்
தோன்றுதடா நந்தலாலா



Friday, 28 July 2023

பன்னீர் புஷ்பங்களே !


பன்னீர் புஷ்பங்களே பாடல் வரிகள்

Movie Name : Aval Appadithan (1978) (அவள் அப்படித்தான்)
Music :Ilaiyaraaja    Year :1978
Singers : Kamal Haasan       Lyrics :Gangai Amaran
 


பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு 
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது 
புது தாளம் தொட்டு ஓ 
புது ராகமிட்டு 

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ 
இது யார் பாவம் 

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ 
இது யார் சாபம் 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது .
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை 
நிஜ வாழ்க்கையிலே 

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது 
பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு

 

Thursday, 24 November 2022

மயக்கமா ! கலக்கமா ! மனதிலே குழப்பமா ! வாழ்க்கையில் நடுக்கமா !



மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்
தோறும் வேதனை இருக்கும் (2)

வந்த துன்பம்
எதுவென்றாலும்
வாடி நின்றால்
ஓடுவதில்லை (2)

எதையும்
தாங்கும் இதயம்
இருந்தால் இறுதி
வரைக்கும் அமைதி
இருக்கும்

மயக்கமா கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி (2)

நாளை பொழுதை
இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு (2)

உனக்கும் கீழே
உள்ளவர் கோடி நினைத்து
பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

 Song : Mayakkama Kalakkama

  • Movie/Album Name : Sumai Thangi 1962
  • Star Cast : Gemini Ganesan and Devika
  • Singer : P.B. Sreenivas
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

போனால் போகட்டும் போடா !


 

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது
இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

சட்டி சுட்டதடா! கை விட்டதடா! புத்தி கெட்டதடா ! நெஞ்சைத் தொட்டதடா !



 சட்டி சுட்டதடா
கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

நாலும் நடந்து
முடிந்த பின்னால்
நல்லது கெட்டது
தெரிந்ததடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

பாதி மனதில்
தெய்வம் இருந்து பார்த்து
கொண்டதடா மீதி மனதில்
மிருகம் இருந்து ஆட்டி
வைத்ததடா (2)

ஆட்டி வைத்த
மிருகமின்று அடங்கி
விட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு
மனதில் கோயில்
கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை
நெஞ்சில் கூடிவிட்டதடா

தர்ம தேவன்
கோவிலிலே ஒலி
துலங்குதடா (2)

மனம் சாந்தி
சாந்தி சாந்தியென்று
ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

எறும்புத் தோலை
உரித்துப் பார்க்க யானை
வந்ததடா நான் இதயத்
தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா (2)

பிறக்கும் முன்னே
இருந்த உள்ளம் இன்று
வந்ததடா (2)
இறந்த பின்னே வரும்
அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

 

  • Song : Satti Suttathada
  • Movie/Album Name : Aalayamani 1962
  • Star Cast : Sivaji Ganesan, S. S. Rajendran, C. R. Vijayakumari and B. Saroja Devi
  • Singer : T.M. Soundararajan
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan