Total Pageviews

Wednesday, 3 March 2021

என்னடா பொல்லாத வாழ்க்கை?


என்னடா பொல்லாத வாழ்க்கை?
அட என்னடா பொல்லாத வாழ்க்கை !
யாரை நெனச்சு நம்ம பெத்தாலோ அம்மா
அட போகும் இடம் ஒன்னு தான் விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அல்ட்டிக்கலாமா

(என்னடா)

காடாறு மாதம் அப்பா
நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதை இது தான்ப்பா
நம்ப நிலை தேவலையப்பா

முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு!
இல்லை ஓடுற வரைக்கும் ஓடு !
இதுக்கு போய் அலட்டிக்கலாமா!
இதுக்கு போய் அலட்டிக்கலாமா!

(என்னடா)

படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமிக்கிட்டா போய் கேளு ?
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

(என்னடா)





நான் செய்யுறேன் தப்புதண்டா!
வேற வழியெதும் உண்டா?
ஊருக்குள்ளே யோக்கியனை கண்டா
ஓடி போயி என்னிடம் கொண்டா!
கிடைச்சா கிடைக்கிறவரைக்கும் பாரு,
பிடிச்சா திருட்டுப் பட்டம் நூறு
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

படம்:- தப்புதாளங்கள்
இசை:- MSV
பாடல்:- கண்ணதாசன்
பாடியவர்:-SP.பாலசுப்ரமணியம்

 

கனவு காணும் வாழ்க்கை யாவும் ! கலைந்து போகும் கோலங்கள்........

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

பிறக்கின்ற போதே…
பிறக்கின்ற போதே…
இறக்கின்ற தேதி..
இருக்கின்றதென்பது..
மெய் தானே…

ஆசைகள் என்ன..
ஆசைகள் என்ன..
ஆணவம் என்ன..
உறவுகள் என்பதும்
பொய் தானே

உடம்பு என்பது..
உடம்பு என்பது..
உண்மையில் என்ன..??
கனவுகள் வாங்கும் பை தானே!!

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

காலங்கள் மாறும்.
காலங்கள் மாறும்.
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்..

தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
போனது போக..
எது மீதம்..

பேதை மனிதனே
பேதை மனிதனே
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

 




Friday, 20 March 2020

கொரோனா விழிப்புணர்வு தமிழ் பாடல்

கொரோனா விழிப்புணர்வு தமிழ் பாடல்!  வைரலாகி வருகிறது. இந்த பாடலில் கொரோனா எப்படி பரவுகிறது, அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், என்ன அறிகுறிகளை கொடுக்கும், உள்ளிட்ட தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த பாடல் ரஜினி நடித்த முத்து படத்தில் தில்லானா தில்லானா மெட்டில் உருவாகியுள்ளது. அந்த பாடல் பின் வருமாறு: 
 
கொரோனா ! கொரோனா! என்னை கொன்னுடாதா வீணா !
 
நெஞ்சுக்குள்ள நீயும் வரவேணாம்!
 
கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா வீணா !
 
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
 
 கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா ! [Soon Ah
 
வீட்டுக்குள்ள சேஃபா [safe aha] இருப்பேன் நான் !
 
இரும வச்சதும் நீ தானா , அட காய்ச்சல் தந்ததும் நீ தானா!
 
 மாஸ் கேதரிங் வேணாமுன்னு நியூஸில் சொன்னானா !
 
 கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா 
வீணா !நெஞ்சுக்குள்ள நீயும் வரவேணாம்! 
 
 கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா 
 
 வீட்டுக்குள்ள சேஃபா இருப்பேன் நான் 
 
சைனாவினில் பிறந்த நீயும் சளிக்காத நோயை 
 
கண்ணு மூக்கு வாயை தொட்டு பரப்பாதே நீயே 
 
காய்ச்சல் வரட்டு இருமல் சோர்வு மூச்சுத் திணறல் 
 
தலைவலி இவைதானே கொரோனாவின் குறிப்பான 
 
அறிகுறி ஊரோடு சேராமல் இருக்கின்றேன் 
 
உன்னாலே சானிடைசர் பூசாமல் தொடவில்லை 
 
உன்னாலே டிரெயின் பஸ் ஏரோபிளேனில் 
 
ஏறவில்லை உன்னாலே மால் தியேட்டக் பார்க் 
 
என்று சுற்றவில்லை உன்னாலே ஸ்கூலுக்கு 
 
போவாத சுட்டீஸ் தொல்லை உன்னாலே 
 
கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா 
 
வீணா மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
 
கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா 
 
வீட்டுக்குள்ள சேஃபா இருப்பேன் நான் இரும 
 
வச்சதும் நீ தானா , அட காய்ச்சல் தந்ததும் நீ தானா 
 
கூட்டம் கூட்டமாக சேராதேனு WHO 
 
சொன்னான்னா 
 
ஹச் ஹச் தும்மல்..... ஹச் ஹச் தும்மல் 
 
கழுவிட்டோம் விட்டோம் டோம் டோம் (4) 
 
கொரோனா வைரஸ் உலகில் பலகோடி உண்டு 
 
கொத்து கொத்தாய் கொரோனா நம் மீது கண் 
 
வைத்ததென்ன பன்றிக் காய்ச்சல் பறவை காய்ச்சல் 
 
இதில் மீளும் போது கொரோனாவில் வென்று 
 
மீண்டும் எழுவோமே நாமே தடுப்பூசி வரும் 
 
வரையில் தடுத்தாள வேண்டாமா கிருமி தூசி 
 
பரவாமல் முகமூடி அணிவோமா வெளியில் சுற்றி 
 
வந்தாலே கழுவி விடு கை காலை குழந்தைகள், 
 
பெரியோரை காத்து விடு கண் போலே இனி ஒரு 
 
விதி செய்து இந்த நாளும் காப்போமே கொரோனா 
 
கொரோனா என்னை கொன்னுடாதா வீணா 
 
மூச்சுக்குள்ள நீயும் வர வேணாம் கொரோனா 
 
கொரோனா என்னை கொன்னுடாதா வீணா 
 
நெஞ்சுக்குள்ள நீயும் வர வேணாம் கூட்டத்துல 
 
போன நீ தொத்திக்குவ சூனா வீட்டுக்குள்ள சேஃபா 
 
இருப்பேன் நான் இரும வச்சதும் நீ தானா , அட 
 
காய்ச்சல் தந்ததும் நீ தானா கூட்டம் போட 
 
வேணாமுன்னு தனியா இருக்க சொன்னானா 
 
கொரோனா கொரோனா என்னை கொன்னுடாதா 
 
வீணா நெஞ்சுக்குள்ள நீயும் வர வேணாம் 
 
கூட்டத்துல போன நீ தொத்திக்குவ சூனா 
 
வீட்டுக்குள்ள சேஃபா இருப்பேன் நான் மூச்சுக்குள் 
 
நீயும் வரவேணாம் வீட்டுக்குள்ள நீயும் வரவேணாம்
 
ஐயோ இன்னும் எத்தநாலு இந்த நோயோ (2) என்று பாடல் முடிகிறது. 
 
இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Friday, 20 September 2019

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !




இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!

அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு !

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை !

இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை!

இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை!

இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை!

கனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்!

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்!

இணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்!

அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்!

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!

வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்!

உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்!

எண்ணம் - மருதகாசி

குரல் - சீர்காழி கோவிந்தராஜன்

இசை - கே வி மகாதேவன்

திரைச்சித்திரம் - மானமுள்ள மறுதாரம்


Wednesday, 20 December 2017

ஊருக்கும் வெட்கமில்லை! இந்த உலகுக்கும் வெட்கமில்லை !




ஊருக்கும் வெட்கமில்லை 
இந்த உலகுக்கும் வெட்கமில்லை 
யாருக்கும் வெட்கமில்லை 
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..! 
ஏ சமுதாயமே.... 

மேலும் கீழும் கோடுகள் போடு 
அதுதான் ஓவியம் 
நீ சொன்னால் காவியம் 
ஓவியம் என்றால் என்னவென்று 
தெரிந்தவர் இல்லையடா..! 
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் 
அதுதான் தொல்லையடா..! 

அத்தனை பழமும் சொத்தைகள்தானே 
ஆண்டவன் படைப்பினிலே..! 
அத்திப்பழத்தை குற்றம் கூற 
யாருக்கும் வெக்கமில்லை..! 
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து 
முதுகைப் பாருங்கள்..! 
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு 
அதனைக் கழுவுங்கள்..! 

சுட்டும் விரலால் எதிரியை காட்டி 
குற்றம் கூறுகையில்..! 
மற்றும் மூன்று விரல்கள் 
உங்கள் மார்பினை காட்டுதடா..! 
எங்கேயாவது மனிதன் ஒருவன் 
இருந்தால் சொல்லுங்கள்..! 
இருக்கும் அவனும் புனிதன் என்றால் 
என்னிடம் காட்டுங்கள்..! 

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் 
அவனுக்கு வெட்கமில்லை..! 
அத்தனை பேரையும் படைத்தானே 
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..! 
இப்போதிந்த உலகம் முழுவதும் 
எவனுக்கும் வெட்கமில்லை..! 
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் 
எமனுக்கும் வெட்கமில்லை..!

Sunday, 11 September 2016

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால். .


படம் : வேட்டைக்காரன்

இசை : K.V.மகாதேவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் : T.M.சௌந்தராஜன்

வருடம்: 1964

🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால். .

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும். . . தாழ்ந்தாலும். . .

தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)


மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா. . .

தன்னை தானும் அறிந்து கொண்டு

ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா. . .

(மானம் பெரியதென்று)
.
.
.
(உன்னை அறிந்தால்)

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழவேண்டும்

ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

(மாபெரும்)

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம். . .

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் !




படம்: முள்ளும் மலரும்

இசை: இளையராஜா

பாடியவர் : யேசுதாஸ்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

வருடம் : 1978

🎶🎧🎶🎧🎶🎧🎶🎧🎶🎧

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

செந்தாழம்பூவில்...

பூ வாசம் மேடை போடுதம்மா

பெண் போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா. . . ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை

மங்கை மோக கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்

பருவ நாண ஊடலோ...

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி

ராகம் என்ன பாடுது

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்...

அழகு மிகுந்த ராஜகுமாரி

மேகமாக போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு

மலையை மூட பார்க்கிறாள்

பள்ளம் சிலர் உள்ளம் என

ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தர தேடுகின்றேன்

எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்...

இளைய பருவம் மலையில் வந்தால்

ஏகம் சொர்க்க சிந்தனை

இதழில் வருடும் பனியின் காற்று

கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடை காற்று

வான் உலகை காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

எங்கோ என்னை கூட்டுது

மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்...